தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும், தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கும் சுதந்திரக் கட்சி உள்ளடங்கலாக அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இருப்பினும் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்ததை போன்ற கூட்டணியை சுதந்திரக் கட்சியுடன், உருவாக்க நடவடிக்கையும் எடுக்கப்படாது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
மாறாக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அல்லது தேசியக் கொள்கையை தயாரிப்பதற்கு சுதந்திர கட்சியுடன் பரந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை அறிக்கை ஒன்றினை தயாரிப்பதில் ஆரம்பத்தில் கவனம் செலுத்தும் என்றும் அதன் பின்னர் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அறிய விரும்பும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.