செய்திகள்பொருளாதார செய்திகள்

பொருட்களை வாங்குமுன் யோசித்து வாங்குங்கள் – அமேசான் நிறுவனர் அறிவுரை!!

Amazon

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் யோசித்து வாங்குங்கள் என அறிவுரை கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று மற்றும் தற்போது நடந்துவரும் ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் முழுக்கவே கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாகப் பொருளாதார அறிஞர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதம் கடும் உயர்வு ஏற்பட்டு மந்தநிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழல் காரணமாக அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் சமீபத்தில் தான் அளித்த பேட்டியொன்றில் “அமெரிக்காவில் பண்டிகை விடுமுறை காலம் வரும் நிலையில் மக்கள் புதிய கார்கள், டிவிக்கள், பிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அமெரிக்க பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதனால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை தலைதூக்கலாம் என எச்சரித்த அவர் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் பெரிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்தால் அதை ஒத்திப்போடுங்கள், நிலமை எப்படி இருக்கிறது எனக் கவனித்து பார்த்து பின்னர் முடிவெடுங்கள். வாகனம், பிரிட்ஜ் மற்ற எந்த பொருளாக இருந்தாலும் இதையே பின்பற்றுங்கள் என்றும் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் கூறியிருக்கும் இந்த அறிவுரை பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button