பலாலி – தமிழக விமான சேவைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து தமிழகம் செல்வதற்கான பயணக் கட்டணத்தை விட கணிசமான அளவு குறைவான கட்டணமே அறவிடப்படும் என வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
யாழில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டது என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.