இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மாணவர்களைத் தரம் ஒன்றுக்கு  சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது!!

Admission

அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

2024 ஆம் ஆண்டில் தங்கள் பிள்ளைகளை அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மாதிரி படிவம் மற்றும் அறிவுறுத்தல்களின்படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பதிவுத் தபாலில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு ஓகஸ்ட் 18, 2023 க்கு முன் அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சகல தகைமைகளும் 2023 ஜூன் 30ம் திகதிக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் பூர்த்திசெய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button