இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மன்னாரில் விளையாட்டு மைதானம் புனரமைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் சென் விக்டரி விளையாட்டு மைதானம் புனரமைப்பிற்காக ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த விளையாட்டு மைதானத்தின் அதன் ஆரம்ப வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு அமைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைய குறித்த விளையாட்டு மைதானம் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், விக்டரி விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button