இலங்கைசெய்திகள்

அச்சுவேலி – தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம்!!

achchuveli

அச்சுவேலி – தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின் 2022ம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு 30.03.2022 புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு யாழ்ப்பாண கல்லூரி பிரதி அதிபர் அருட்திரு . தேவமித்திரன் { சபைக்குரு} அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சி. கணேசலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ். அச்சுவேலி ஆரம்ப பாடசாலை அதிபர் திரு. சி. சதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள். பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button