இந்தியாசெய்திகள்

ஒடிசா ரயில் விபத்தின்போது இறத்ததாக கூறப்பட்ட மகனை மீட்டெடுத்த தந்தை!!

Accident

 ஒடிசா ரயில் விபத்தில்  சிக்கிப் படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து     தந்தை ஒருவர் , மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சிச்.சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 ஹெலராம் மாலிக் என்ற தந்தை, ரயில் விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்த போது, 

 தனது 24 வயதான மகன் பிஸ்வாஜித் மாலிக் என்பவரை ரயிலில் பயணித்ததனால், உடனடியாக  மகனிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட  நிலையில், மகன் உயிருடன் இருக்கிறார் என்பதையும் ஆனாலும்  கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் விபத்து நடந்த இடத்திற்கு உறவினர் ஒருவருடன் ஆம்புலன்ஸில்  சென்றுள்ளார்.

அங்கு சென்ற நிலையில்,   எங்கு தேடியும் மகனைக்  காணாமையால் மருத்துவமனைகளில் சென்று தேடியுள்ளனர். அங்கும் மகனைக் காணவில்லை. 

இறுதியில் ,  அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கான முகவரி தந்தைக்கு கிடைத்துள்ளது.

அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களைக் காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களுடன் வாதாடிய வேளை பலியானவர்களின் உடல்களுக்கு இடையே ஒருவரின் கை அசைவதைக் கண்டு அங்கு சென்று பார்த்த பொழுது அது அவரது மகன் என தெரியவந்துள்ளது.

உடனடியாக , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஸ்வாஜித்தை ஆம்புலன்ஸில் ஏற்றி,  முதலுதவி செய்து கொல்கத்தாவுக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முதற்கட்ட அறுவைச் சிகிச்சையின் பின்னர் மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கால்களில் மட்டுமே அவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறாக சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லும்  அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் துறையைச் சாராதவர்கள் என்பதால் படுகாயமடைந்து நினைவிழந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை சரியாக உறுதி செய்யாமல், சவக்கிடங்கில் போட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button