இலங்கைசெய்திகள்

வெவ்வேறு விபத்துக்களில் இரு பெண்கள் பரிதாப மரணம்!!

accident

இரு வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற இரு விபத்துக்களில் பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு நிக்கலஸ் மாகஸ் மாவத்தை தலாதுவ சந்திக்கு அருகில் வானொன்று பாதசாரி பெண்ணொருவரை மோதியதில் அவர் மரணமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிசிக்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளைஇ குருநாகல் கொழும்பு வீதி கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்இ பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியதில் பெண் மரணமடைந்துள்ளார்.

கடதுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button