றம்புக்கனை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் தாங்கியின் மீது, பின்னால் இருந்து வந்த தொடருந்து இயந்திரமொன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
இன்று (11) காலை இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, டீசல் தாங்கியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள டீசல் கையிருப்பு, தாங்கிகளில் ஏற்றப்பட்டு வருவதாகவும் றம்புக்கனை தொடருந்து நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.