இலங்கைசெய்திகள்

வவுனியாவில் டிப்பர் வாகனத்திற்குள் புகுந்த துவிச்சக்கரவண்டி!!

accident

வவுனியாவில் டிப்பர் வாகனத்திற்குள் புகுந்த துவிச்சக்கரவண்டி. வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (12) காலை 9.30 மணியளவில் டிப்பர் வாகனம் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை மோதி தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புளியங்குளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியோரமாக துவிச்சக்கரவண்டியில் சென்றவரை பின்பக்கமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியினுள் துவிச்சக்கரவண்டி சிக்குண்டதுடன் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுக்குள்ளாகினார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button