இலங்கையில் தினமும் 3 மணித்தியாலங்களுக்கு 4 மரணங்கள் இடம்பெறுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ திட்டத்தின் முகாமையாளர் விசேட வைத்தியர் சமித ஸ்ரீதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 32 முதல் 35 வரையான விபத்துகளால் மரணிப்பதாக பதிவாகுவதாகவும் விபத்துகள் காரணமாக வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
அனைத்து வகையான விபத்துகளும் தற்போது அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.