க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள், திட்டமிடப்பட்ட திகதிகளில் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.