இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மகா நாயக்கர்கள் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் – ஜனாதிபதி அநுரகுமார!!
Srilanka

அரசாங்க விவகாரங்களில் மகாசங்கத்தினரின் தொடர்சியான வழிகாட்டல்களை தாம் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .
கண்டி ஜனாதிபதி மாளிகையில் மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை தேரர்களை நேற்று ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.
அரசாங்க விவகாரங்களில் மகாசங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்க்கிறேன். தேசிய மத மற்றும் சமூக மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துகிறேன் என்றும் கூறினார்.
மேலும் பெளத்த சாசன ரீதியாக நிலவும் பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை உடனடியாக தயாரிக்குமாறும் சம்பந்தப் பட்ட துறைகளுக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்