இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
இனப்பிரச்சனைக்கு புதிய வழியில் தீர்வு!!
புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் எனவும் அரசியல் கைதிகளை விடுவிப்போம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2.
ஆளுநர் செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!!
பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
3.
ஜனாதிபதி அனுரவைச் சந்தித்தார் சிறிதரன்!!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சிறிதரன் சந்தித்து உரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
4.
காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகள் போராட்டம்!!
சர்வதேச சிறுவர் முதியோர் தினமான ஒக்டோபர் 1ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
5.
இலங்கையில் ஈழத்தமிழருக்கு அதிகாரம் வழங்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை!!
இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழருக்கு அதிகாரம் வழங்கவும், வடக்கு கிழக்கை இணைத்து தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு – பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் கோரியுள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி