இன்றைய (23. 08.2024 – சனிக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
இனப்பிரச்சனை மேலோங்கியமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்!!
நாட்டின் பொருளாதார பிரச்சினை மேலோங்கியமைக்கு இனப்பிரச்சினையை பாரதூரமாக்கியமையே காரணம் என தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
2.
தனியார் வைத்தியசாலையில் நடந்த அசம்பாவிதம்!!
மாத்தறையில் இயங்கிவரும் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர்களின் அசமந்தப் போக்கால் சிகிச்சை பெறச் சென்ற சிறுவன் 4 மணித்தியாலங்களுக்கு மேல் காக்கவைக்கப்பட்டு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை முகநூலில் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
3.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் முதன் முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் புதிய இணையத்தள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, www.pravesha.lk என்ற இணையத்தளத்தையே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
4.
பேட்டியின் போது காயமடைந்த இலங்கை வீரர்!!
இங்கிலாந்து வேகப்பந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் வீசிய பந்து இலங்கை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் வலது கையின் கட்டை விரலில் பட்டு காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறிய தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5.
இலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் ஆபத்தான நோய் – வைத்தியர் எச்சரிக்கை!!
நாட்டில் உள்ள சிறுவர்களிடையே இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
6.
யாழில் 400 வருடம் பழமையான சிவன் ஆலயம் புனரமைப்பு!!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணி ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.
அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி , யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செய்தியாளர் – சமர்க்கனி