இன்றைய (22.08.2024 – வியாழக் கிழமை) பத்திரிகை முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்!!
13வது திருத்தச் சட்டம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாது எனவும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் எனவும் ஐக்கிய சோஷலிச கட்சியின் வேட்பாளர் சிறீதுங்க ஜெயசூரிய தெரிவித்தார்.
2.
யாழில் சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைகழக மாணவியுடன் தலைமறைவு!!
யாழில் உறவினரின் விழாவுக்கு வந்த சுவிஸ் குடும்பஸ்தர் ஒருவர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில் , பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் யுவதியின் சகோதரர் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
3.
சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்!!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள இன்றையதினம் (21-08-2024) விலகிய நிலையில் தற்போது காவிந்த ஜயவர்தன விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4.
இலங்கை வழங்கும் இலவச விசா!!
இலங்கைக்கு வருவதற்காக, 35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடனான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.
5.
வவுனியா வைத்தியசாலையில் வைத்தியரின் அசண்டையால் சிசு மரணம்!!
வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை இறந்துள்ளதாக தந்தை ஒருவரினால் பொலிசில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
6.
அதிகரித்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை!!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி