இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகளின் தொகுப்பு சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

மனித புதைகுழி விவகாரம் – இன்று கவனயீர்ப்பு!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் காணாமல் போனோரில்  உறவுகளால் இன்று கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 

2.

தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய பிரதிநிதிகள்!!

இலங்கையில் செப் – 21 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சியார் சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார். 

3.

 கடலில் மூழ்கிய படகில் பயணித்த இலங்கையர்கள்!!

இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த 160 அடி நீளமான சொகுசு படகு கடலில் மூழ்கியுள்ளது.  

இதில், 7 பேரைக் காணவில்லை என கூறப்படுகிறது. 

4.

வேகமாகப் பரவும் வைரசால் வெளிவந்த எச்சரிக்கை!!

உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கம்மை வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் குரங்கம்மை வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

5.

மட்டுப்படுத்தப்படது கடவுச்சீட்டுகள்!! 

கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

6.

பிரபல இசையமைப்பாளர் மீது அவதூறு வழக்கு!!

வாடகை நிலுவை தரவில்லை என தன் மீது பொலிஸாரில் முறைப்பாடு அளித்த வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button