இன்றைய (12.08.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
பொதுக்கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு!!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தவுள்ள பொதுக்கட்டமைப்பை ஜனாதிபதி பேச்சிற்கு அழைத்திருந்த போதும் அச்சந்திப்பு பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உரிய காரணங்களைக் கேட்டு தமிழ் தரப்பினரால் சந்திப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2.
போலி இணையதளம் தொடர்பில் விசாரணை!!
இலங்கை – தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் போன்ற போலியான இணையத்தளம் ஒன்று இயங்குவது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
3.
தேர்தல் கண்காணிப்பிற்கு ஐரோப்பிய பொதுநலவாய கண்காணிப்பாளர்கள்!!
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
4.
வர்த்தகர்களுக்கான எச்சரிக்கை!!
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாகவும் இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன் வைத்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5.
நாமல் விலகிறனால் நாம் இணைவோம்!!
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச வேட்பு மனு தாக்கல் செய்யாமல் தனது தவறைத் திருத்திக் கொண்டால் நாங்கள் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி