இன்றைய (09.08.2024 – வெள்ளிக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
News
1.
திரு. அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக அறிவிப்பு!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2.
வடக்கின் சகல மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை நிறுவுமாறு பணிப்பு!!
வடக்கு மாகாணத்தின் சகல வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவை நிறுவுமாறு வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
3.
சுனிதா வில்லியம்ஸ் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உட்பட சக வீரர்கள் இந்தாண்டு இறுதி வரை பூமிக்குத் திரும்பமுடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
4.
இலக்கத்தகடுகளைப் பகிரங்கப்படுத்துமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக விண்ணப்பித்துள்ளனர்.
5.
நிகழ்நிலை காப்புச்சட்டம் தொடர்பான அறிவிப்பு!!
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் திருத்தச்சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
6.
யாழ். மருந்தகம் ஒன்றிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!
யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
7.
யாழ். பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவலம்!!
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய மலசலகூடத்தில் இருந்து கழிவு நீர் அங்குள்ள வாய்காலில் நிறைந்து நிற்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபைக்கு ஐந்து நாட்களாக இது தொடர்பாக முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
8.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான அறிவிப்பு!!
வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி