இன்றைய (18.07.2024) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
News
1.
ரணில் தலைமையில் புதிய கூட்டணி!!
ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களின் அறிவிப்பு படி , ஏதிர்வரும் 25ம் திகதிக்குப் பின்னர் ரணில் தலைமையிலான கூட்டணி பற்றிய தகவல் வெளியாகும் எனத் தெரியவருகிறது.
2.
தமிழ் பொது லேட்பாளர் என்பது எமது ஒற்றுமையைக் காட்டுவதற்கே!!
தமிழ் மக்களின் ஒற்றுமையை முழு உலகிற்கும் காட்டுவதற்காகவே தமிழ் பொது வேட்பாளர் விடயம் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன்.
3.
வடக்கு கிழக்கை தமிழரின் தேசமாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை!!
வடக்கு கிழக்கை தமிழரின் தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
4.
உரங்கள் விலை குறைப்பு!!
ஐந்து வகை உரங்களை இரண்டாயிரம் ரூபாய் வரை குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
5.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு விசேட குழு!!
வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
6.
கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியவர் கைது!!
வடக்கு மாகாண சுகாதார மேம்பாடுகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7.
நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய குகை!!
நிலவில் முதன் முறையாக நிரந்தர குடியேற்றம் அமைக்கக்கூடிய பாரிய குகை ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளது.
நிலவில் உள்ள Mare Tranquillatis என்ற பாறை சமவெளியில் ரேடார் ஆய்வை முன்னெடுத்த போது இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்தியாளர் – சமர்க்கனி