இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில்(08.06.2024 – சனிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைத்தியர்கள் வேலை நிறுத்தம் – நோயாளர்கள் வெளியேறினர்!!

சாவகச்சேரி மருத்துவமனை வைத்திய அதிகாரி வெளியிட்ட பரபரப்பு காணொளியால் அங்கு வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வெளியேறியுள்ளனர். 

2.

யாழ்.  வம்சாவழிப் பெண் பிரிட்டன் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்!! 

ஈழத்தமிழ் பெண்ணான யாழ்ப்பாண வம்சாவழியைச் சேர்ந்த உமாகுமாரன் முதல் முதலாக பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 

3.

செல்வராசா கஜேந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!!

தமிழ் அரசியலை ஒற்றை ஆட்சிக்குள் முடக்குவதற்கான செயற்பாடுகளை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

4.

கொகாகுத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் பிரதான வீதியும் அகழப்பட்டது!!

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழப்படும் பணி  நேற்று ஆரம்பமான நிலையில்,   பிரதான வீதியும் அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

5.

யாழ் பகுதிக்கு புதிய பொலிஸ் அத்தியாட்சகர்!!

யாழ்ப்பாணம் – பொலிஸ் பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக சூரிய பண்டார நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். 

6.

கடன் மறுசீரமைப்பின் மூலம் 800 கோடி கடன் நிவாரணம்!!

கடன் மறுசீரமைப்புகளுடன் இணைந்ததாக இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்தும் 500 கோடி டொலர் கடன் வட்டி நிவாரணமும் வர்த்தக கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 300 கோடி டொலர் கடனும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

7.

ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் புதிய சட்டமூலம்!!

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பான குழப்பம் உள்ளதால் அதனை ஆராய அமைச்சவையில் யோசனை  ஒன்று முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button