இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகை (02.08.2024 செவ்வாய்க்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!

News

 1.

நாளை பாராளுமன்றில் இரா.  சம்பந்தருக்கு அஞ்சலி!!

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.  சம்பந்தரின் பூதவுடல் நாளை புதன் கிழமை பாராளுமன்றில் இறுதி அஞ்சலிக்காக அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த இடமான திருகோணமலையிறல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

2.

பேருந்து கட்டணம் குறைப்பு!!

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைவடைந்துள்ளன என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

3.

இந்திய தூதரகத்திற்கு முன்பு போராட்டம்!!

கடற்படைச் சிப்பாய் மரணமடைந்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் இந்திய மீனவர்களின் அத்து மீறலை தடுக்க கோரியும் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றுள்ளது. 

4.

 சஜித்திற்கு அழைப்பு விடுத்தது இந்தியா!!

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இந்தியாவுக்கு வருமாறு அந்த நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

 5.

இன்றும் அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்!!

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு தருமாறு அதிபர் ஆசிரியர்கள் இன்றும் பாடசாலைகளுக்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

6.

சம்பந்தருக்கு இபந்தியப் பிரதமர் இரங்கல்!! 

இலங்கையில் வாழும் தமிழர்கள் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி என்பவற்றைப் பாதுகாக்க பாடுபட்டவர் இரா.  சம்பந்தன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

7.

சம்பந்தருக்கு ஜனாதிபதி இரங்கல்!!

ஒரு தேசிய தலைவராக நாட்டின் அமைதிக்கு சம்பந்தர் அரும்பாடுபட்டவர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கல் உரையில் கூறியுள்ளார். 

8. யாழ்.  பல்கலைக்கழக விரிவுரையாளரின் மனைவி மரணம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திலீபனின் மனைவி புற்றுநோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button