கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
ஜவின்ஸ்தமிழ் இணையதளத்தின் தரம் 5 வளவாளர்கள் கௌரவிப்பு!!
Ivinstamil


கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கினை மிகச் சிறப்பாக மேற்கொண்ட பிரபல ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா ஒன்று அண்மையில் யாழ் நகர தனியார் விருந்தினர் விடுதி ஓன்றில் ஐவின்ஸ் தமிழ் பொறுப்பாசிரியரின் தலைமையில் இடம்பெற்றது .




குறித்த நிகழ்வின் போது, ஆசிரியர்கள், ஐவின்ஸ் தமிழ் கல்விப் பகுதி பொறுப்பாசிரியரும் யாழ்.
மத்திய கல்லூரி ஆசிரியரும்
புலமைச்சுடர் கையேட்டின் ஸ்தாபகருமான திரு. இ.ஜனதனால் நினைவு பரிசில் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்.

இதன்போது, திரு. சிவ. தீபன், திரு. து. திலிப்குமார், திரு. ஆ. ஜெயநேசன், திரு. சண். சுதர்சன், திரு. எஸ். சந்திரபவன், திரு. கே
ஜெயரமணன், திரு. செ. நிசாந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

செய்தியும் படங்களும் ரகுராம்