இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
Paper News
1.
இலங்கையில் மீள ஆரம்பமாகும் ஜப்பானிய திட்டங்கள்!!
இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
அதன்படி, கண்ணிவெடி அகற்றலுக்காக 30 கோடி ரூபாயை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது.
2.
பொலிஸ் உத்தியோகத்தர் உயிர் மாய்ப்பு!!
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சுகயீனம் எனக் கூறிவிட்டுச் சென்று உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3.
வெளிநாட்டு பண மோகத்தில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது!!
வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் ஒருவர் யாழில் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர் எனவும், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4.
கச்சதீவு பிரச்சினையில் புதிய உடன்பாட்டுக்கு வந்தது இலங்கையும் இந்தியாவும்!!
கச்சதீவு மற்றும் பாக்கு நீரிணை கடல் எல்லைப் பிரச்சினையில் இரு நாடுகளும் விரிவான உடன்பாட்டை எட்டியுள்ளன.
5.
சிறைக்குச் சென்றார் ஹிருணிகா!!
ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
6.
மன்னார் துறைமுக முனையத்திற்கான கேள்வி கோரல்!
மன்னார் துறைமுகத்தில் 300மீற்றர் நீளமான முனையம் நிர்மாணிப்பதற்கான கேள்வி கோரல் விடுக்கப்பட்டுள்ளதாக விமானம் மற்றும் துறைமுக அமைச்சு தெரிவித்துள்ளது.
7.
இலங்கை வருகிறார் அமெரிக்க திறைசேரியின் உதவி செயலர்!!
அடுத்த வாரம், அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்.
8.
எமக்கு ஆயுதங்களை வழங்கியது ஜே வி பி யினரே என்கிறார் பிள்ளையான்!!
ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு முதலிலும் ஜே. வி. பியினரே ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
9.
மகிந்தவை, சீனாவின் பழைய நண்பரென அழைத்துள்ளார் சீன வெளிவிவகார அமைச்சர்!!
சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டோங், மகிந்தவை “சீனாவின் பழைய நண்பரே” என அழைத்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10.
கென்யாவின் நிலையே இலங்கைக்கும் வந்திருக்கும் என்கிறார் ஜனாதிபதி!!
பொருளாதார நெருக்கடியால் இலங்கை இன்னொரு கென்யாவாக மாறியிருக்கும் என ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி