இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
Paper news
1.
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!!
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலையில் நிற்க வேண்டியது அவசியம். எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காவிட்டால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2.
ரணிலுக்கு ஒஸ்காரைவிடச் சிறந்த விருது வழங்க வேண்டும், – சஜித்!!
நாட்டு நிலைமையின் உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து பொய்களைக் கொட்டி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரைக்கு ஒஸ்காரைவிடச் சிறந்த விருது வழங்கவேண்டும் என எதிர்க்கட்சிதலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
3.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு 2025இல் தீர்வு!!
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு 2025ம் ஆண்டளவில் தீர்வு வழங்கப்படுப் எனவும் அதற்கு முன்னர் ஏனைய அரச பணியாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி மல்வத்து மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்ற பின்னர் தெரிவித்துள்ளார்.
4.
இன்று பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!!
இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
5.
மகிந்த சீனாவுக்குப் பயணம்!!
பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்தராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயமாக சீனாவுக்குச் சென்றுள்ளார்.
6.
மயிலத்தனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களிடம் ஒப்படைப்பு!!
மயிலத்தனை மேய்ச்சல் நரையை மீண்டும் பண்ணையாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யூலை 2ம் வாரத்தில் ஜனாதிபதி மயிலத்தனை பண்ணையாளர்களைச் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.
7.
நாட்டின் பொருளாதார பிரச்னை தீர்ந்தது!!
கடன் மறுசீரமைப்பின் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்து விட்டது என நகர வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
8.
விமல் வீரவன்ச தரப்பிலான ஜனாதிபதி வேட்பாளர் களத்தில்!!
விமல் வீரவன்சவை மையப்படுத்தி சர்வஜனபலய கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க தாம் தயாரென மொபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
9.
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வியன்களம் நூல் வெளியீட்டு நிகழ்வும் இசைத்தட்டு அறிமுகமும்!!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் பவித்திராவின் “வியன்களம்” எனும் போர்க்காலப்பணி கவிதை நூல்வெளியீடும் “கொற்றவை” பாடல் இறுவட்டு அறிமுக நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
செய்தியாளர் – சமர்க்கனி