யாழ் – ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலி திறப்புகளைப் பயன்படுத்தி ஆலயத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தே பணம் நகை பெருமளவில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி