இன்றைய தினம், தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் தமிழன் தனது மகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வயதான தாயார் ஒருவருக்கு சுயதொழிலுக்கு வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளார்.
இத்தாயாருக்கு ஒரு மகன் மாவீரர் மற்றும் மருமகனும் மாவீரர் ஆவார்.
இந்த தாயாரே கணவனை இழந்த மகளையும் பேரப் பிள்ளையையும் கவனித்து வருகிறார்.
யுத்தத்தால் பல உறவுகளை இழந்து வாழும் இக் குடும்பத்து உறவுகளுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தொடர்ந்தும் பல வாழ்வாதார உதவிகளை செய்துவரும் சகோதரருக்கு உதவியினை பெற்றுக்கொண்டவர்களும்,சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இவரது அறப்பணியை நாமும் பாராட்டுகிறோம்.