பிள்ளைகளின் வாழ்வில் மண் அள்ளி போடும் பெற்றோர் , அப்ப யாரிடம் சொல்லிசொல்லி அழுவது ..
ஆம். எந்த பெற்றோரும் பிள்ளைகளுக்கு கெடுதல் செய்ய நினைக்க மாட்டார்கள் ஆனாலும் தற்போது பிள்ளைகளின் பூப்பெய்தல் நிகழ்வு்ம் அழகுக்கலை நிபுணர்களின் ((Beautycian ) ஈடுபாடும் தொடர்பாக பேசவேண்டி உள்ளது .
நாகரீக மோகம் , பெற்றோர்களிடையே போட்டி , வெளிநாட்டு உறவினர்கள் நண்பர்களுடன் போட்டியால் இன்று பெண் பிள்ளைகள் பலிக்கடாவாகும் நிலைக்குள்ளாவதுடன் சமூகத்தின் பொருளாதார சீரகுலைவிற்கும் காரணமாகின்றது.
ஒரு பிள்ளை பூப்பெய்தியவுடன் சில விஞ்ஞான ரீதியான காரணங்களுக்காக சில சம்பிராதய நிகழ்வுகளை செய்தாலும் அது இன்று அளவுகடந்து விட்டது . இன்று ஒரு பாடசாலை வகுப்பில் உள்ள மாணவியின்
ஒரு சாதாரண நிலையில் உள்ள பெற்றொர் தங்களின் வசதி கருதி ஒரு நிகழ்வை வீட்டிலோ மண்டபத்திலோ செய்வார்கள். அதுவே. அவ் வகுப்பில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தொடக்க புள்ளியாகின்றது.
போட்டி பொறாமை காரணமாக அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம், பிள்ளைகளில் விதைக்கபடுகிறது.
ஒன்றுமே அறியாத பிள்ளைக்கு 50,000- 150,000 இடைப்பட்ட செலவில் Beautycian , Mehenthy artist என்று பல பேரின் ஒப்பனைகள் இதை வெளிப்படுத்த 100,000 செலவில் வீடியோ pre shorting , indoor shooting ,out door shooting என்று போட்டோ. இவ்வளவு செலவளித்து எடுத்த போட்டொவை பூட்டி வைக்க முடியுமா ? தனது சாதானையை உள் நாட்டு வெளிநாட்டு நண்பர்களுக்கு காட்ட முக நூலில் பெற்றோர் பதிவேற்றுகின்றனர் .. இதன் வழியே தனது அழகை காட்ட பிள்ளையும் தனக்கென ஒரு முக நூலை தொடங்குகிறது… போதாக்குறைக்கு Beautician. தனது விளம்பரத்திற்காக தனது முக நூலில் அந்த பிள்ளையின் சகல போட்டோவையும் ( பெற்றோரின் அனுமதி இன்றி ) பதிவேற்றுகிறார்கள் அதற்கு அந்த முக நூலில் ஆண் நண்பர்களின் அநாகரிமான Comments வேற..
ஒன்றுமே அறியாத பிள்ளையை உலகிற்கு ஒரு கதநாயகியாக அறிமுகப்படுத்த. விரும்பும் பெற்றோர் கதநாயகி தனக்கென ஒரு கதநாயகனை தேடும் போது மட்டும் பிள்ளையை பிழை சொல்லி பொங்கி எழுவதேன் . இது யார் பிழை பிள்ளையின் பிழையா? பெற்றோராகிய உங்கள் பிழையா? .
இதை விட. உங்கள் பிள்ளையின் போட்டோக்கள் Beautician னின் முகநூலில் இருந்து தரவிறக்கம் செய்யபட்டு ஒரு fake ID உருவாக்கப்பட்டு அது ஒரு உண்மையான ID ஆக காட்ட அவ்வப்ப் போது பதிய ( உங்கள் பிள்ளையின் ) படங்களை தரவேற்றம் செய்வார்கள் .
இதன் அடுத்த கட்டமாக மற்ற பெற்றோர் கடன் வாங்கியாவது அவளை விட. உனக்கு சிறப்பாக செய்கின்றேன் என்று சும்மா இருக்கும் பிள்ளையை உசுப்பேற்றுவார்கள். இப்படி. இது ஒரு தொடர்கதையே..
நாளை! … என்ன வெல்லாம் நடக்கும். நீங்களே கற்பனை பண்ணி பாருங்கள். பெற்றோரே உங்கள் செல்ல மகளின் பூப்பெய்தல் நிகழ்வை உங்கள் குடும்பம் உறவுகளுடன் மட்டுபடுத்தி கொண்டாடுங்கள் . உலகத்திற்கு தெரிவிக்க வேண்டாம் . ( photo வும் ஒப்பனையும் உங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கட்டும் ) அறிவுள்ள
பெற்றோரே Beautycians்மாரே இது பொறாமையால். வெளியிடப்படும் பதிவு அல்ல ஆரோக்கியமான கலாச்சாரமான ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கான ஒரு முயற்சியே..