இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கடும் வெப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

Extreme heat

 இலங்கையில் தற்போது  நிலவும் கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது எனவும், கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த நாட்களில் பின்பற்ற வேண்டும் என நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் வலுவாக இருக்கும் 10.00 – 2.00 மணி வரை சூரியனை எதிர்கொள்வதைத் தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியே சென்றால் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தொப்பி, குடை போன்றவற்றைப் பயன்படுத்துமாறும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு குழந்தைகளை கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது கட்டாயம் என்றும், வெயில் அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளில் விளையாட அனுமதிக்காத வகையில் சிறு குழந்தைகள் தொப்பி அணிந்து சன் கிரீம் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்றும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button