காணாமல் போன இளம் தாயும், அவருடைய ஒன்றரை வயது குழந்தையும் எட்டு நாட்களுக்குப் பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்தங்கொட தோட்டம் புதுக்காடு பிரிவுவில் வசித்து வந்த இளம் தாய், தனது ஒன்றை வயது குழந்தையுன் கடந்த 17ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு செல்வதாக குழுந்தையையும் தூக்கிக்கொண்டு, தனது கணவனிடம் கூறி சென்ற அப்பெண், அன்றையதினம் வீடு திரும்பவில்லை.
பதற்றமடைந்த கணவன் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலை மற்றும் பல இடங்களில் தேடிய பின்னர் ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்,
கணவரின் முறைப்பாட்டுக்கு அமைய ஹங்குராங்கெத்த பொலிஸார் அந்த பெண் சென்ற இடங்களில் உள்ள சி.சி.ரிவி கமெராக காட்சிகள் மூலமாக விசாரணைகளை மேற்கொண்டனர்,
இதனை தொடர்ந்து ஹங்காராங்கெத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த பெண், தன்னுடைய குழந்தையுடன் அவிசாவெல்ல பிரதேசத்தில் இருப்பதாக ஹங்குராங்கெத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அவிசாவெல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதனையடுத்தே அந்த பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுப்பிடித்து தாயும் பிள்ளையையும் மீட்டுள்ளனர்.
*கணவனின் தொந்தரவு காரணமாகவே இந்தப் பெண் வீட்டை வீட்டு வெளியேறியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.*
அப்பெண்ணின் கணவன், திங்கட்கிழமை (24) தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து, காப்பாற்றப்பட்டு ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ஹங்குராங்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.