இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிறுவர்களின் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவிப்பு!!

Srilanka

தற்போது  குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா  தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளாகும் எனவும் 

கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருவதாகவும் தெரிவித்த மருத்துவர் ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர ஆண்டுதோறும் சுமார் 100 குழந்தைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் தற்போது இது போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குழந்தைகளை கையடக்கத் தொலைபேசியிலிருந்து விலக்கி வைப்பதே சிறந்தது எனவும் 

குழந்தைகளின் உணவில் எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்தாமல் இருந்தால் நாளை ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்கலாம் என்றும் மருத்துவர்   தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button