கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் குருந்துவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.
அதோடு குறிப்பாக கொழும்பு நகரில் அதிகளவான கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் கொழும்பில் டெங்கு நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் இருப்பினும் மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.