மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் இராட்சத வெளிநாட்டு கப்பலொன்று இன்று (7) மதியம் 2.மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது.
தலைமன்னார் மற்றும் நடுக்குடா கடற்படையினர் கரை ஒதுங்கிய கப்பலுக்கு பாதுகாப்பளித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
கப்பலை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இருப்பினும்
கப்பல் தொடர்பான முழு விபரங்களை அறிய முடியாமல் உள்ளது.
தகவல் –
மன்னாரில் இருந்து கம்பிகளின் மொழி பிறேம்