கொத்து ரொட்டி மற்றும் பிரைட்ரைஸ் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, இவற்றின் விலைகள் நூற்றுக்குப் 10 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டமையினதும் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளமையினதும் நலன்களை நுகர்வோருக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் விலை குறைப்பு செய்யப்படாத உணவகங்களை படம் பிடித்து இணையத்தில் பதிவிடலாம் எனவும் அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.