இன்று (26) முதல் 60 வகையான மருந்துகளுக்கு 16 வீதம் விலைக்குறைப்பு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவினால் வெளியிடப்பட்டுள்ளது.
டொடர் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன் படி பரசிட்டமோல் ஒன்றின் பெறுமதி 3 ரூபா 49 சதம் ஆக குறைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.