கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உயிரிழந்த உறவுகளின் அஸ்தி வைக்கப்பட்டு நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று தொடர்பில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்த தமது உறவினா்களின் அஸ்தியை அவர்களின் நிரந்தர நினைவுப் பரிசாக வைத்திருப்பது இலங்கையர்களுக்குப் பரிச்சயமில்லை எனினும் ஐரோப்பியர்கள் அஸ்தியை வைத்து நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களை அணிய விரும்புகிறார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த சந்தை வாய்ப்பை உணர்ந்த RKS நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இது, அஸ்தியைக் கொண்டு நகைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாகும்.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், அதன் உற்பத்திக்கு நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரோலண்ட் கார்ல் ஷோய்பர் தொிவித்துள்ளாா்.