டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதாகும் அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி தூரத்தில் இக் கப்பலின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கப்பல் கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்து சிறிது நேரத்திலேயே சிறு வெடிப்புடனான சத்தத்தை அமெரிக்கா கடற்படை உணர்ந்து கொண்டது எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டானிக் கப்பலின் சிதைவுகள குறித்து ஆய்வு செய்வதற்காக புறப்பட்ட டைட்டன் கப்பலின் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள் ஒரு பேரழிவு வெடிப்பு இடம்பெற்றமையை உறுதிப்படுத்துவதாக அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது.