செய்திகள்புலச்செய்திகள்

புத்தகத்திற்கு தீயிட்டு எரித்த புலம்பெயர் தமிழர்கள் சிலர் – காரணம் இதுதான்!!

France

 பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் வீட்டை சுற்றிவளைத்த, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் சிறு அளவிலான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் புலம்பெயர்ந்து தற்போது பிரான்ஸில் வசிக்கிறார்.

அவரது “வயல்மாதா“ சிறுகதைத் தொகுதி கடந்த சில தினங்களின் முன்னர் பிரான்ஸின் போர்கோன் மாநிலத்தின் நெவர் பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு, அங்கு புலம்பெயர்ந்து வாழும் சில கத்தோலிக்க தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் டானியல் ஜெயந்தனின் வீட்டைச் சுற்றிநின்று மிரட்டல் விடுத்த பின்னர், அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் முன்பாக வயல்மாதா சிறுகதை தொகுதியின் பிரதிகள் சிலவற்றையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

புத்தகத் தலைப்பும், உள்ளடக்கமும் கிறிஸ்தவத்தை அவமதிக்கும் விதமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத அடிப்படைவாதிகளைப் போல செயற்பட்ட அந்த குழுவின் மிரட்டலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் கருத்துச் சுதந்திரத்தை உயரிய அளவில் பேணும் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் குறிப்பிடப்படும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சிலர் மதத்தை காரணம் காட்டி புத்தகத்தை தீவைத்துள்ளமையானது அங்குள்ள தமிழ் மக்களையும் பெரிதும் சங்கடப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர இவ்வாறு எமது மக்கள் நடந்து கொள்வது சரியானதல்ல என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button