இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் மண் காய்ச்சல் பரவல் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

Fever

 இலங்கையின் பல மாகாணங்களில்  எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா கொரியா, இதனைத் தெரிவித்தார். 

இந்த நோயானது, தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் ஏற்படுகிறது என்றும் “மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருகின்றது.  எனவும் இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும்” என்றும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button