மனித உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்தை , கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பேராசிரியர் சமிரா ஆர்.சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர், அண்மையில் அறிமுகப்படுத்தினர்.
பேராசிரியர் கருத்து தெரிவிக்கும் போது, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சத்து மருந்தைத் தயாரிக்க முடிந்தது என்றும் இந்த ஊட்டச்சத்து மருந்தை புற்று நோயாளிகள் மற்றும் புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது இயற்கை ஊட்டச்சத்து மருந்து என்றும், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், உள் புற்றுநோய் என சுமார் 15 வகையான புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது என்றும்
இலங்கையின் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்குத் தீர்வாக இந்நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வது முக்கியம் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.