அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், கடவுச்சீட்டை இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்,
ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி, நாட்டின் எந்த மாகாணத்திலும் வசிப்பவர் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் தனது வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று புதிய முறையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும், மேலும் உங்கள் கைரேகைகளை வழங்கிய பின்னர், நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
ஐம்பது (50) பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை எடுக்கும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதுடன்,
தபால் திணைக்களத்தினால் இதற்கான புதிய கூரியர் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையில் தரகர்கள் சட்டவிரோதமான முறையில் ஈடுபடுவதாக ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து,
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.