க. பொ. த சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் பரீட்சையில் வெற்றி பெற.ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் ஏற்பாட்டில் வளர்மதி சனசமூக நிலையம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் சாதாரண தர மாணவர்களுக்காக நடத்திய கருத்தரங்கு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இலங்கையிலேயே க. பொ. த சாதாரண மாணவர்கள்களுக்கு துல்லியமான வீடியோ , அதற்கு ஏற்றவாறான ஒடியோ வசதியுடன் நேரலையில் இடம்பெற்ற முதலாவது மாபெரும் சிறந்த கருந்தரங்கு என்ற பெருமையும் சாதனையும் ஐவின்ஸ் தமிழுக்கும் வளர்மதி கல்விக் கழகத்திற்கும் கிடைத்துள்ளது.
கருத்தரங்கிற்கு அனுசரணை வழங்கி உதவிய மட்டுவில் பிரணவன் அறக்கட்டளைக்கும் அதன் ஊடாக 200 000 க்கு மேற்பட்ட நிதியைச் செலவு செய்த சமூக ஆர்வலர் செந்தூரனுக்கும் வளவாளர்களுக்கும் மாணவர்கள் சார்பாக பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்கினை நடத்துவது என்பதும் அத்தகு துறைகளில் சிறந்த வளவாளர்களைத் தெரிவு செய்து தொழிநுட்பக் குறைபாடுகள் ஏதுமின்றி அதனை நடத்துவதும் சாதாரணமான விடயம் அல்ல.
இக் கருத்தரங்கில் திரு. எஸ். ஜே..ஆதி, தமிழ்ச்சுடர். க.மு. நித்தி, திரு. எஸ். மணிமாறன்,. திரு. கே. பாலவிசாகன், திரு. என். மகேந்திரன், திரு. வே. கமலேஸ்வரன்.ஆகியோர் வளவாளர்களாகக்.கடமை புரிந்துள்ளனர்.
கல்விப் பணி என்பது அறத்தின்.நற்சிறந்த பண்பாகும். கல்வியில் திறமைகாட்டி, ஒழுக்கம், பண்பு.இவற்றை சிறப்பாக கடைப்பிடித்து மாணவர்கள் உயர்ந்தோங்க வேண்டும் என்பதே எமது பேரவா ஆகும்.
சமூகத்தின் நற்பிரஜைகளை உருவாக்கும் எமது பாரிய பணியில் இணைந்து செயற்படுகின்ற உறவுகள் அனைவருக்கும் ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் சார்பில் நன்றிகளைக தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் மாணவர்களுக்கு எமது வாழ்த்துகளைத்.தெரிவித்துக் கொள்கின்றோம்.