அனுராதபுரம் நகரில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுக்கும் பஸ் மற்றும் வேன்கள் குறித்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 106 பாடசாலை சேவை பஸ்கள் சோதனையிடப்பட்ட நிலையில், அவற்றில் 65 பஸ்கள் போக்குவரத்து நடவடிக்கைக்குத் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு, சில பஸ்களில் இயங்குவதற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றவும், மேலதிக குழாய்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டதுடன், இயக்க தகுதியற்ற தொழில்நுட்ப குறைபாடுள்ள பஸ்கள் சேவையிலிருந்து அகற்றப்பட்டன.
ஏனைய பஸ்களின் குறைபாடுகளை சரிசெய்து 14 நாட்களுக்குள் மீண்டும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.