![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/IMG-20230512-WA0001.jpg?resize=443%2C419&ssl=1)
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கில் இன்றைய தினம் ( 12.05.2023 – வியாழக்கிழமை ) சைவ சமய பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் , தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. வே.கமலேஸ்வரனின் சைவ சமயபாட வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
சைவ சமய எதிர்பார்ப்பு வினாக்கள் குறித்தும் ஏனைய பகுதிகளுக்கான சுருக்கமான விடையளித்தல் முறை பற்றியும் விளக்கவுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/IMG-20230512-WA0002.jpg?resize=708%2C1011&ssl=1)
இக் கருத்தரங்கானது ஐவின்ஸ் தமிழ் யூரியூப் தளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படவுள்ளதால் நாடு பூராகவுமுள்ள மாணவர்கள் இணைந்து பயன்பெறுமாறு மட்டுவில் வளர்மதி கல்விக் கழகத்தினரும் ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் கல்விப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.