கல்விசெய்திகள்

இன்றைய கருத்தரங்கில் வடமாகாண முன்னணி ஆசிரியர் திரு. எஸ். ஜே. ஆதியின் வரலாறு பாட வழிகாட்டல்!! 

Seminar

 ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும்  சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கு இன்றைய தினம்  மட்டுவில் தெற்கு வளர்மதி கல்வி கழகத்தில்   ஆரம்பமாகவுள்ளது. 

இதன்படி,  வட மாகாணத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரான மு / வித்தியானந்தா கல்லூரியின் வரலாறு பாட ஆசிரியரும் உளவியல் சிறப்பு பட்டதாரியுமான திரு. எஸ். ஜே. ஆதி அவர்களின் வழிகாட்டலில் இன்று மாலை தொடங்கவுள்ளது.

ஆரம்ப நாளான இன்று சாதாரண தரப் பரீட்சைக்கான வரலாறு எதிர்பார்ப்பு மாதிரி வினாத்தாள் குறித்த தெளிவுபடுத்தல் நுட்பங்களும் இறுதி மாதிரி வினாத்தாள் விளக்கங்களும் இடம்பெறவுள்ளது. 

மாணவர்களின் நேர நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொந்தரவு அற்ற வகையில்  மாலை 5. 00 மணி தொடக்கம் இரவு 10.00 வரையில் இடம்பெறவுள்ளது. 

நாடு பூராகவுமுள்ள மாணவர்களின் நலன் கருதி இந்த வழிகாட்டுதல் கருத்தரங்கு  ஐவின்ஸ் தமிழ் யூரியூப் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.  

இக் கருத்தரங்கு சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயன் தரும் என ஐவின்ஸ் தமிழ் நம்புகின்றது.  மாணவர்கள் அனைவரும் கருத்தரங்கில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Related Articles

Leave a Reply

Back to top button