நிலவில் .4G தொழில்நுட்பக் கட்டமைப்பை அமைக்க NASA அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் Nokia நிறுவனமும் இணைந்து திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டின் இறுதியில் குறித்த விடயம் செயல்படுத்தப்படலாம் எனவும் CNBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், SpaceX உந்துகணை வழி கட்டமைப்பு நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தரமான காணொளிகள், இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்பம், உணரும் ஆற்றல் போன்றவற்றுக்கு 4G கட்டமைப்பு உதவும் என Nokia தகவல் தெரிவித்துள்ளது.