அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதால், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலையும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
டொலர் விலை குறைவினால் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைக்குமாறு இலங்கையில் உள்ள விமான நிறுவன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் விமான டிக்கெட்டுகளின் விலைகளை மேலும் குறைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறைவடைந்துள்ள நிலையில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதாகவும், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.