கிளிநொச்சி புனித திரேசாள் கல்லூயில் தரம் 11 மாணவிகளை வகுப்பறை கட்டடங்களுக்கு வெளியே வெயிலில் இருக்கவைத்து பரீட்சை எழுத வைத்ததமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்து.
பாடசாலையில் இருந்த கட்டடத்தினுள் பரீட்சைக்கு அதிபர் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்து மாணவிகள் வெளியே வெயிலில் அமரவைக்கப்பட்டு பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் அதிபருடன் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு பதிலளித்த அதிபர், இவ்விடயம் தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் சில ஆசிரியர்கள் தன் மீதுள்ள வன்மத்தினால் இவ்வாறு செய்துள்ளனர் எனத்தெரிவித்ததுடன் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளார்..