இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பென்பது அரசின் நாடகம்!!

Money

 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்துள்ளார்.

1. ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற கட்டுக்கதை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.

2. அது அரசியல் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது.

3.  எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளித்து, மக்களை ஏமாற்றுவதற்காக ரூபாய் மதிப்பு உயர்ந்துவிட்டது என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது.

4.  முடிவெடுப்பதில் மத்திய வங்கி தற்போது சுயாதீனமாக இல்லை.

5. அது முழுப் பொருளாதாரத்தைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுக்கவில்லை.

6.  மத்திய வங்கி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறது.

7.  டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படுவதாகவும், நாடு அபிவிருத்தி அடையும் எனவும், அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் கட்டுக்கதையை உருவாக்க சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button