வடக்கின் 116 வது ஆடுகளம் – 29 வது தடவையாக வெற்றி வாகை சூடியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி!!(ஒரு குறுமீளாய்வு – ஐவின்ஸ்தமிழுக்காக ஜனரஞ்சகன்)
Battle of the north
“வடக்கின் பெரும் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கட் தொடரில் 9 விட்கெட்டுகளால் சென்ஜோன்ஸ் அணியை வெற்றி கொண்டு மத்திய கல்லூரி அணி. வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை வெற்றி படைத்துள்ளது.
யாழ்பாணத்தின் முதலாவது பெரும் துடுப்பாட்டப் போட்டியானது 116 வது ஆண்டாக இம்முறை நடந்தது .
முதல் நாளில் 43 ஒவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் அர்ப்பணித்து 278 ஓட்டங்களைக் குவித்த மத்திய கல்லூரி, ஆரம்ப நாளிளேயே பிற்பகல் வேளையில் பலமானார்கள். இதில், நிசாந்தன் அஜய் 74, விதுசன் 71, சஞ்சயன் 42 , அனுசாந்த் 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
அன்றைய தினமே எதிர்த்தாடத் தொடங்கிய சென்ஜோன்ஸ் அணி மறுநாள் மதியம் வரை அனைத்து விக்கட்டுகளையும் அர்ப்பணித்து 127 ஒட்டங்களையே பெற முடிந்தது. ஜெசீல் 43, சபேசன் 34 ஒட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றனர்.
அன்றைய தினமே இனிங்ஸ் வெற்றி முயற்சிக்காக மீண்டும் சென்ஜோன்ஸ் அணியை உடனடியாக மீள துடுப்பாட மத்திய கல்லூரி பணித்தது.
இந்த இரண்டாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் பின் தொடந்து ஆடிவந்த சென்ஜோன்ஸ் அணி, நேற்று முன்தினம் ஆட்டம் நிறைவுக்கு வந்த போது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஒட்டங்களுடன் தடுமாறியது. அந்த அளவுக்கு மத்தியின் பந்துவீச்சு எறிகள் அபாரமாக இருந்தது.
கவிசன் 22, விதுசன் 12 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நேற்றைய தினம் , இறுதி நாளில் இருவரும் தொடரந்து துடுப்பெடுத்தாடினர்.ஆனால் இந்த இணை நிலைக்கவில்லை .மேலதிகமாக எந்த ஒட்டமும் எடுககாமலே விதுசன் ஆட்டமிழந்தார்.
அவர், 53 பந்துகளில் 12 ஒட்டங்களை சேர்த்திருத்தார். அடுத்து வந்த அசாந்த் நிலைக்க முயற்சித்தார் . ஆனால் அவர் 6 ஒட்டங்களுடன் பருதியின் பந்துவீச்சில் சஞ்சயனிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் நிதானித்து ஆடிய கவிசனுடன் இறுதி விட்கெட்டுக்காக இணைந்தார் கஜகர்ணன் . இருவரும் நிலைத்து ஆட முயன்ற போதும் கவிசன் 37 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
53.2 ஓவர்களில் சென்ஜோனஸ் கல்லூரி சகல விட்கெட்டுகளையும் இழந்து 160 ஒட்டங்களையே பெற முடிந்தது . இதில் ஜனத்தன் 26, ஜெசில் 25, ஒட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக பந்து வீசிய நியூட்டன்,பருதி ஆகியோர் தலா 5 விட்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்போது, யாழ் மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஒட்டங்களைவிட 8 ஒட்டங்களே அதிகமாமாகும்.
எனவே,. “9 ஒட்டங்களைப் பெற்றால் போதும் வெற்றி” என்ற இலகு இலக்குடன் களமிறங்கியது மத்திய கல்லூரி.
அணித்தலைவர் கஜன் – சஞ்சயன் தொடக்கம் கொடுத்தனர். கஜன் ஒரு ஒட்டத்துடன் ஆட்டமிழந்தார் . ஆனால் அடுத்து வந்த விதுசன் ஒரு பௌண்டரியை விளாசினார் . 3.1 என்ற ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ஒட்டங்களைப் பெற்ற மத்திய கல்லூரி வெற்றி பெற்றது . சஞ்சயன் 2, விதுசன் 5 ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
வீழத்தப்பட்ட ஒரு விகெட்டையும் சென். ஜோன்ஸ் வீரர் அபிசேக் கைப்பற்றினார் .
வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு 5 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது .
போட்டியின் நாயகனாக நியூட்டன், சிறந்த துடுப்பாட்ட வீர்ராக நிசாந்தன் அஜய் ( 74 ஒட்டங்கள் ) , சிறந்த பந்து வீச்சாளராக பருதி (5 விக்கெட்டுகள் ) ஆகியோர் மத்திய கல்லூரி சார்பாகவும்
கிந்துசன், சிறந்த களத்தடுப்பாளராக சென் ஜோனஸ் அணி சார்பாகவும் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு தலா 25 000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது . இந்தத் தொடரில் மத்தியின் அணித்தலைவர் தனிப்பட்ட ரீதியில் துரதிஸ்ட வசமாக ஜொலிக்கவில்லையாயினும் சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார்.
இதே சமயம் நடைபெற்று முடிந்த 116 போட்டிகளின் வரலாற்று உசாவுகைகளின் படி சென்ஜோனஸ் கல்லூரி 38 போட்டிகளிலும் , யாழ் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
41 போட்டிகள சமநிலையில் முடிவடைந்தன.
7 போட்டிகளின் முடிவுகள் கிடைக்கவில்லை . ஒரு போட்டி கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிக்கு பாடசாலை சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் பங்களிப்புச் செய்தவர்களாக இருந்தாலும்
இம்முறை வழமைக்கு
மேலதிகமாக லண்டன் பழைய மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பு அளப்பெரியதாக இருந்ததை அறியமுடிகிறது. மிகக் குறிப்பாக இலங் கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் பாடசாலைகளுடன் பயிற்சி ஆட்டங்கள் பலவற்றை ஒழுங்குபடுத்தி , வீரர்களுக்குரிய சத்துணவு , போக்குவரத்து எனப் பல வெற்றிக்கான முன்னேற்பாட்டுச் செயற்திட்டங்களுக்கு பெருந்தொகையான நிதியினை
லண்டன் பழைய மாணவரகள் சங்கம் வழங்கி பாரிய ஊக்குவிப்பு வழங்கியமை பலராலும் பாராட்டப்படுகிறது .
சமராடி வெற்றிபெற்ற மத்தியின் வேங்கைகளுக்கும் வெற்றிக்கு உழைத்த அதிபர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், அணிப்பொறுப்பாசிரியர், விளையாட்டுப் பொறுப்பாசியர் , பிரதி உப அதிபர்கள் , முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் , மாணவர்கள் உட்பட பாடசாலை சமூகத்திற்கு ஐவினஸ் தமிழும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.